தெலுங்கு புரடியூசர்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள்?

Sinoj
வியாழன், 21 மார்ச் 2024 (22:05 IST)
தமிழ் சினிமாவின் முன்னண் ஹீரோக்கள் தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க காரணம் என்ன சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் தெலுங்கு தயாரிப்பாளர்களின் படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பதாக தகவல் வெளியாகிறது.
 
நடிகர் அஜித்குமார் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அவர் வாங்கும் சம்பளத்தைவிட கூடுதலாக ரூ.20 கோடி சம்பளம் தருவதாகக் கூறியதால் தமிழ் பட தயாரிப்பாளருக்குப் பதில் அவர்களுக்கு கால்ஷூட் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
 
அதேபோல் விஜய் அவரது அடுத்த படத்திற்கு ஆர்.ஆர்.ஆர். படத்தை தயாரித்த பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்திற்குக் கொடுத்திருக்கிறார் என தகவல் வெளியானது.
 
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தின் உண்மையான தயாரிப்பாளர் தெலுங்கு தயாரிப்பாளராக யு.வி. கிரியேசன் என தகவல் வெளியாகிறது.
 
தனுஷ் அடுத்து நடிக்கவுள்ள குபேரா படத்தின் தயாரிப்பாளரும் தெலுங்கு புரடியூசர் என்று கூறப்படுகிறது. அதேபோல் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும், விக்ரமின் அடுத்த படத்தையும் தெலுங்கு படத் தயாரிப்பாளர்களே தயாரிக்கவுள்ளதாக் கூறப்படுகிறது.
 
இந்த  நிலையில், வளரும் காலத்தில் கைதூக்கிவிட்ட தமிழ் படத் தயாரிப்பாளர்களை விட்டுவிட்டு தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க காரணம் என்ன சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்