தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகிபாபு, அமீர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். யுவன் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தை ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்த டிவிடி தனய்யா இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இப்படத்தை இயக்க ஹெச்.வினோத், தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் உள்ளிட்ட 3 பேரிடம் கதை கேட்டதாகவும், இதில், ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு வரியுடன் சேர்த்து ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.