கிண்டல் செய்த ஆர்.ஜே.பாலாஜியை திட்டி தீர்த்த லட்சுமி ராமகிருஷ்ணன்

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2016 (16:32 IST)
கடவுள் இருக்கான் குமாரு படத்தில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை கிண்டல் செய்துள்ளனர். இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாலாஜியை கடுமையாக திட்டியுள்ளார்.


 

 
லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா என்ற வசனத்தை அனைவரும் கிண்டல் செய்து வருகின்றனர். அதோடு இந்த வசனம் பாடலாகவும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
கடவுள்  இருக்கான் குமாரு படத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை, பேசுவதெல்லாம் உண்மை என்ற பெயரில் கேலி செய்துள்ளார்கள். இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் லட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் பாலாஜியை கடுமையாக திட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
என்னுடைய நிகழ்ச்சியை நீங்கள் கிண்டல் செய்வதற்கு முன்னால் உங்களுடைய படங்களை நீங்கள் விமர்சனம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அம்மணி படம் பெரிய அளவுக்கு வெற்றிபெறாவிட்டாலும், எனக்கென்று ஒரு தனி மரியாதையை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. 
 
சென்னை வெள்ளத்தின்போது விளம்பரத்துக்காகத்தான் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக காட்டிக் கொண்டார் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா? இல்லையா? ஆனால் நான் அப்படி சொல்லும் ஆள் கிடையாது. நான் மற்றவர்களை மதிக்கக்கூடியவள், என்று பதிவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்