சந்தானத்துக்கு ஏன் வாய்ப்பு கொடுத்த – சிம்புவிடம் கவுண்டமணி கேள்வி !

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (15:15 IST)
மன்மதன் படத்தில் சந்தானத்துக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை கவுண்டமணி பறிக்கப்பார்த்ததாக லொள்ளுசபா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

லொள்ளு சபா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்ற லொள்ளு சபா சாமிநாதன் சமீபத்தில் ஒரு நேர்காணல் அளித்திருந்தார். அதில் தன்னுடன் லொள்ளு சபாவில் நடித்து அதன் பின்பு காமெடியனாகி இப்போது ஹிரோவாக உயர்ந்துள்ள சந்தானத்தைப் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது ‘சந்தானத்துக்கு முதன்முதலாக மன்மதன் படத்தில் மிகப்பெரிய வேடம் கிடைத்தது. அதன் மூலம் அவர் மேல் ரசிகர்களின் கவனம் விழுந்தது. அப்போது மன்மதன் படத்தில் சிம்புவின் மாமாவாக முக்கிய வேடத்தில் நடித்த கவுண்டமணி அவரிடம் ‘ அவனே சினிமாவை எல்லாம் கலாய்ச்சு லொள்ளு சபால நடிச்சுட்டுஇருக்கான். அவனுக்குப் போய் சான்ஸ் கொடுக்கறீயே?’ என கேட்டுள்ளார். ஆனால் அதைக் கேட்காத சிம்பு சந்தானத்தின் காட்சிகளை அதிகமாக்கினார் என நான் கேள்விப்பட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்