மெர்சல் விஜய்க்கு மிரட்டல் தரும் புதிய வீரன் இவன் தான்

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (23:18 IST)
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக ஏற்கனவே நயன்தாராவின் 'அறம்' மற்றும் மோகன்லால்-விஷாலின் 'வில்லன்' உள்பட நான்கு திரைப்படங்கள் வெளிவரவுள்ள நிலையில் தற்போது இன்னொரு படமும் இணைந்துள்ளது.



 
 
ஆம், சசிகுமாரின் 'கொடிவீரன்' திரைப்படம் தீபாவளி தினத்தில் ரிலீஸ் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தீபாவளி கடும் போட்டியான தீபாவளியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
 
சசிகுமார், மஹிமா நம்பியார், சானுஷா, பாலா, பாலசரவனன், பூர்ணா உள்பட மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தை முத்தையா இயக்கியுள்ளார். என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு கதிர் ஒளிப்பதிவும், வெங்கட்ராஜன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை சசிகுமாரின் கம்பெனி புரடொக்சன்ஸ் தயாரித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்