என் வாழ்க்கையை மாற்றிய அவரின் முடிவு…. KGF கதாநாயகியின் வைரல் ட்வீட்!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (09:05 IST)
கே ஜி எஃப் 1 மற்றும் 2 படங்களில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகியுள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி.

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து தற்போது படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஒரு அதிரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்தார்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி, தற்போது பிரபல கதாநாயகி ஆகியுள்ளார். அவர் நடிப்பில் கோப்ரா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க தன்னைத் தேர்வு செய்த இயக்குனர் பிரசாந்த் நீல் குறித்து டிவிட்டரில் “நீங்கள் எடுக்கும் சில முடிவுகள் உங்கள் வாழ்க்கையையே மாற்றும். ஆனால் மிகவும் அரிதாக மற்றவர்கள் எடுக்கும் முடிவுகள் கூட அதுபோல அதிசயத்தை செய்யும். பிரசாந்த் என்னை தேர்வு செய்தது என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. நன்றி பிரசாந்த்… எல்லாவற்றுக்கும்” எனக் கூறி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்