கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.
இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் சுமார் 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிலையில் தற்போது கேஜிஎப் படத்தைத் தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க உள்ளது. பிரபாஸின் சலார், சுதா கொங்கராவின் அடுத்த படம் என்ற வரிசையில் இப்போது கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜ்குமாரின் பேரன் யுவராஜ்குமார் அறிமுகம் ஆகும் படத்தைத் தயாரிக்கிறது. இதுபற்றிய அப்டேட் இன்று காலை வெளியானது.