கேஜிஎஃப் 3 ரிலீஸ் எப்போது? இப்போவே அறிவித்த தயாரிப்பாளர்!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (11:26 IST)
பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த கேஜிஎஃப்பின் 3ம் பாகம் ரிலீஸ் குறித்து அதன் தயாரிப்பாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிரசாத் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து 2018ல் வெளியான படம் கேஜிஎஃப். இதன் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 படமும் பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் வாரி குவித்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் 3 படத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கேஜிஎஃப் 3 குறித்து பேசியுள்ள அதன் தயாரிப்பாளர் விஜய் கிரகந்துர் “கேஜிஎஃப் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி 2023ல் முடிவடையும், படம் 2024ல் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மார்வெல் போன்ற தனி யுனிவர்ஸை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்