இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (11:13 IST)
இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம்: மணப்பெண் யார் தெரியுமா?
பிரபல இசையமைப்பாளர் டி இமான் சமீபத்தில் தனது மனைவி மோனிகா என்பவரை விவாகரத்து செய்த நிலையில் தற்போது மறுமணம் செய்துள்ளார் 
 
டி இமானை திருமணம் செய்து கொண்டவர் திரையுலகில் கலை இயக்குனராக இருந்த உபால்டு என்பவரின் மகள் எமிலி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் நேற்று இந்த திருமணம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நடிகை மற்றும் தயாரிப்பாளர் குட்டி பத்மினி, சங்கீதா மற்றும் அவரது கணவர் கிரிஷ் உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்