உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக KGF 2… பிரபல தொலைக்காட்சி வெளியிட்ட தகவல்!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (15:15 IST)
கே ஜி எப் 2 திரைப்படம் இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸானது.

இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது வரை 1200 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்துக்கான ஒரு சிறு முன்னோட்டம் கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படம் தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்