கீர்த்தி சுரேஷின் காதலர் அவர் இல்லை… தந்தை அளித்த விளக்கம்!

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (15:41 IST)
ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அது உண்மையில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளி நண்பர் ஒருவரை 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஃபர்ஹான் என்ற தனது நண்பரின் பிறந்தநாளுக்காக அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து வாழ்த்தியிருந்தார். உடனே இவர்தான் கீர்த்தி சுரேஷின் காதலரா என்று வதந்திகள் பரவ தொடங்கின. இதையடுத்து கீர்த்தி சுரேஷின் தந்தை இப்போது இந்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில் “ப்ர்ஹானும் கீர்த்தியும் நல்ல நண்பர்கள். அவர்கள் காதலர்கள் இல்லை. கீர்த்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டால் முதல் ஆளாக நானே அறிவிப்பேன்” என விளக்கம் அளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்