சிவகார்த்திகேயன் ஜோடியாகும் சூர்யா பட நடிகை !

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (16:03 IST)
பாகுபலி ,ஆர்.ஆர்.ஆர், படங்களுக்குப் பின் தெலுங்கு சினிமாவின் மீது இந்திய ரசிகர்களின் கவனம் திரும்பியது. அதேபோல், தெலுங்கு சினிமா நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் பல மொழிகளில் வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில், தெலுங்கில் உப்பென்னா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் கீர்த்தி ஷெட்டி. இவர் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் , ராம் பொத்தினிக்கு ஜோடியாக தி வாரியர் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இதற்கிடையே இவர் பாலாவின் இயக்கத்தில், சூர்யா ஜோடியாக கடலாடி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மண்டேலா பட இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்