சைலண்ட் ஆக ஓடிடியில் ரிலீஸ் ஆன கவினின் ஸ்டார் திரைப்படம்!

vinoth

வெள்ளி, 7 ஜூன் 2024 (15:16 IST)
கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தின் ரிலீஸூக்கு முன்னால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் இந்த படம் முதல் மூன்று நாட்களில் 15 கோடி வசூலித்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் மோசமான விமர்சனம் காரணமாக அதன் பிறகு வசூல் சுத்தமாகக் குறைந்துவிட்டது. அந்த நேரத்தில் ரிலீஸ் ஆன அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இந்த படத்தால் தாக்குப் பிடிக்கவில்லை.  அதனால் அடுத்த லெவலுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட கவினுக்கு இது ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படம் சத்தமில்லாமல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது. ஓடிடி ரிலீஸ் குறித்த எந்தவொரு விளம்பரத்தையும் படக்குழு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்