உபியில் பாஜகவின் மோசமான தோல்வியை தடுத்த மாயாவதி.. அதிர்ச்சி புள்ளி விபரங்கள்..!

Mahendran

வெள்ளி, 7 ஜூன் 2024 (12:34 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் மாயாவதி பிரித்த வாக்குகள் காரணமாகத்தான் பாஜகவுக்கு 14 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது என்ற புள்ளிவிவரம் தற்போது தெரியவந்துள்ளது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்திலும் பாஜக வெற்றி பெற்றுவிடும் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் சமாதிவாதி கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதும், பாரதிய ஜனதா கட்சி 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாஜக வெற்றி பெற்ற 33 தொகுதிகளில் மாயாவதியின் பிஎஸ்பி கட்சி அதிக வாக்குகளை பிரித்து உள்ளது என்றும் அந்த கட்சி மட்டும் போட்டியிடாமல் இருந்தால் பாஜகவுக்கு மேலும் 14 தொகுதிகள் குறைந்திருக்கும் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன
 
அம்ரோஹா, பரூகாபாத், பூல்பூர், ஷாஜஹான்பூர், உன்னாவ், ஹர்தோய், மிஸ்ரிக், பன்ஸ்காவ்ன், மிர்சாபூர், பதோஹி , பிஜ்னோர் ஆகிய தொகுதிகளில் மாயாவதியின் பிஎஸ்பி, பாஜக வெற்றி வித்தியாசத்தை விட அதிகம் பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன
 
2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மாயாவதி, தனது கட்சியின் நோக்கம் சமாஜ்வாதி கட்சியின் எதிர்காலத்தை அழிப்பது என கூறியிருந்த நிலையில் அவர் பாஜகவை எதிரியாக கருதாமல், சமாஜ்வாடி கட்சியை எதிரியாக கருதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்