பிக்பாஸ் கவின் நடிக்கும் புதிய வெப் தொடர் ஆகாசவாணி!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (11:05 IST)
நடிகர் கவின் நடிப்பில் புதிதாக வெப் தொடர் ஒன்று உருவாக உள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான கவின் நடித்துவரும் திரைப்படம் லிப்ட். இந்தப்படத்தில் பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் வரப்பிரசாத் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . பல மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட கவின் இப்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். அந்த தொடருக்கு ஆகாசவாணி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்