நீட் ஆய்வுக்குழுவுக்கு எதிரான பாஜகவின் மனு தள்ளுபடி !

செவ்வாய், 13 ஜூலை 2021 (16:03 IST)
தமிழக அரசு அமைத்துள்ள நீட் ஆய்வுக் குழுவுக்கு எதிராப்ன பாஜகவின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதற்கு எதிரான அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வந்தாலும்கூட வரும் நீட் தேர்விற்கு தயாராகும்படி மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், தமிழக அரசு அமைத்துள்ள நீட் ஆய்வுக் குழுவுக்கு எதிராப்ன பாஜகவின் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று செனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாவது:

நீட் தேர்வை ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்துள்ள ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு நியமனம் செல்லும். இக்குழுவின் ஆய்வு நீதிமன்ற உத்தரவு, சட்டங்களுக்கு எதிராக இல்லை என்க் கூறி ஏகே. ராஜன் குழு நியமனத்தை எதித்த வழக்க தள்ளுபதி செய்துள்ளது.
இக்குழிவின் அறிக்கையைப் பயன்படுத்தி பின் தங்கிய மாணவர்கள் பயன்பெற மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றலம எனவும், நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில் மாணவர்களுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தலாம் என ஆலோசனை கூறியுள்ளது.

மேலும்,   2021 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்