அதர்வா நடித்து வரும் ‘அட்ரஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி!

செவ்வாய், 13 ஜூலை 2021 (18:23 IST)
பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா தமிழ் திரையுலகில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதன்பின் முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக்குதிரை, ஈட்டி, கணிதன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்தை ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து வரும் அதர்வா சமீபத்தில் அட்ரஸ் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இயக்குனர் ராஜமோகன் என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கிருஷ் கோபாலகிருஷ்ணன் என்பவர் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் பாடலை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை காக்டெயில் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்