ஷூட்டிங் ஸ்பாட்டில் அறிமுக இயக்குனரை அவமானப்படுத்திய கவின்?

vinoth
ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (14:04 IST)
சிவகார்த்திகேயன் பாணியில் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து ஆரம்பநிலை வெற்றியை பெற்றுள்ளார் கவின். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார். இப்போது அவர் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்போது கவின் தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்துக்கு ‘மாஸ்க்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்க இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை புறநகர்ப் பகுதிகளில் நடந்து வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கவினின் நடவடிக்கைகள் முகம்சுளிக்க வைக்கும் விதமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கும் அவரை தகாத வார்த்தை ஒன்றை சொல்லி திட்டி அவருக்கு எப்படிக் காட்சி எடுக்கவேண்டும் என்றே தெரியவில்லை என எல்லோர் முன்னாலும் திட்டியுள்ளாராம். இது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவருக்கும் தர்மசங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்