சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய் வெற்றிக்கழகம் என்று வைத்திருந்தாலும், தி.மு.க.வுக்கு ஊதுகுழலாக இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு அவர் வந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது என்றார். பெரியார் சிலைக்கு விஜய் மாலை போட போனார் என்பதையே காட்டுகிறது என்று தெரிவித்தார்.
மேலும் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு பல்வேறு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு மாநாடு நடத்துவதாக இருந்தால் சினிமா தான் பண்ண வேண்டும் எனவும் அரசியல் பேச முடியாது எனவும் எச். ராஜா கூறினார்.
நீட் தேவையில்லை எனக் கூறும் திமுகவினர், அவர்கள் வீட்டுக்கு மும்மொழி, தமிழ்நாட்டுக்கு இருமொழி என்பதை பின்பற்றுகின்றனர் என்றும் இது ஒரு மோசடித்தனம் என்றும் எச்.ராஜா குற்றம் சாட்டினார்.