பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள டாடா!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (08:26 IST)
கவின் நடித்துள்ள டாடா திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் ரிலீஸூக்கு முன்பே நல்ல விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதையடுத்து இப்போது டாடா என்ற படம் அவர் நடிப்பில் இன்று வெளியாகிறது. இந்த படத்தில் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவரன அபர்ணாதாஸ் நடித்துள்ளார். படத்தை கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்று இருக்கும் நிலையில் இன்று ரிலீஸாகிறது. ரிலீஸுக்கு முன்பாகவே திரைப் பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்த படம் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் படத்தை பாராட்டி பேச, இன்று நல்ல விமர்சனங்களோடு படம் ரிலீஸ் ஆகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்