ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் இன்று அண்ணாமலை தலைமையில் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன் திருப்பதி பாஜகவின் நிலைப்பாடு இன்னும் இரண்டு நாளில் அறிவிக்கப்படும் என்றும் யாருக்கு ஆதரவா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.