ராஜா ராணி -2 சீரியலில் கவின்,லொஸ்லியா? ஸ்கெட்ச் போட்ட விஜய் டிவி!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (13:10 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடர் ராஜா ராணி. இந்த சீரியலில் செம்பா - கார்த்திக் கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா- சஞ்சீவ நடித்து புகழ்பெற்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ராஜா ராணி  சீரியல் முடிவடைந்தது. அந்த சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே ஆல்யா , சஞ்சீவ்  இருவரும் காதலிக்க தொடங்கனார். 


 
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஆல்யா மானசா பங்கேற்பார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால். ராஜா ராணி தொடரின் இரண்டாம் பக்கத்தில் கவின் - லொஸ்லியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 
 
இந்த தகவலை அறிந்த கவின்ஸ்லியா ரசிகர்கள், பிக்பாஸில் பிரித்து வைத்திருந்த இந்த ஜோடியை சீரியலில் காதலர்களாக, கணவன் மனைவியாக பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்