மீண்டும் ஒரு பீரியட் கதையில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி… வெளியான அறிவிப்பு!

vinoth

வியாழன், 31 ஜூலை 2025 (10:07 IST)
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகம் என சொன்னாலும் காந்தாரா கதையின் முன்கதைதான் படமாக்குகிறார்கள்.

இந்த ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகிவிட்டார் ரிஷப் ஷெட்டி. இதையடுத்து தற்போது பேன் இந்தியா ரசிகர்களைக் கவரும் விதமானக் கதைகளில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை அஸ்வின் கங்காராஜு இயக்க, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. 18 ஆம் நூற்றாண்டில் வங்காளப் பின்னணியில் உருவாகும் ஒரு போராளியின் கதையாக இந்த படம் இருக்கும் என தெர்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்