வரலட்சுமி நடித்த ‘காட்டேரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (19:52 IST)
நடிகை வரலட்சுமி நடித்த காட்டேரி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி நான்கு வருடங்கள் ஆகிய நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
யாமிருக்க பயமேன் என்ற திரைப்படத்தை இயக்கிய டிகே இயக்கத்தில் வரலட்சுமி பொன்னம்பலம் கருணாகரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய திரைப்படம் காட்டேரி
 
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டே முடிந்து விட்டது என்பதும் இந்த படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதன்பின் ஒத்திவைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இந்த படம் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்