மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் & செல்லா அய்யாவு…. செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் கட்டா குஸ்தி 2…!

vinoth

வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (18:11 IST)
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி திரைப்படம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரிலீஸான இந்த படம் அதன் பின்னர் பார்வைகளைக் கவர்ந்தது. விஷ்ணு விஷாலின் சினிமா கேரியரில் இல்லாத அளவுக்கு 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து அசத்தியது.

இந்த படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லஷ்மி, கருணாஸ், காளி வெங்கட் மற்றும் முனீஸ்காந்த் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். விஷ்ணு விஷாலை விட ஐஸ்வர்யா லஷ்மிக்கு இந்த படம் பரவலான புகழைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை அறிவித்தனர். இரண்டாம் பாகத்தை விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த முக்கியக் கலைஞர்கள் அனைவரும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்