இந்திய மெகா சீரியலில் நடிக்கும் பில்கேட்ஸ்! உறுதிப்படுத்திய ஸ்மிருதி இரானி!

Prasanth K

வியாழன், 23 அக்டோபர் 2025 (13:26 IST)

முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானி நடித்து வரும் சீரியலில் தொழிலதிபர் பில்கேட்ஸ் சிறப்பு தோற்றத்தில் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

உலக அளவில் கணினி தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ். பல ஆண்டுகள் உலக கோடீஸ்வரர்களில் முதல் இடத்தில் இருந்த பில்கேட்ஸ் தற்போது உலகளாவிய அளவில் அறக்கட்டளை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

 

சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த பில்கேட்ஸ் பிரபல டீக்கடை புகழ் ரோணி சாய்வாலாவை சந்தித்து புகைப்படங்கள் எடுத்தது வைரலானது. இந்நிலையில் தற்போது ஒரு இந்தி சீரியலிலும் முகம் காட்ட உள்ளார் பில்கேட்ஸ் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

முன்னாள் பாஜக அமைச்சரும், நடிகையுமான ஸ்மிருதி இரானி தற்போது கியுங்கி சாஸ் பி கபி பஹூ தி 2 என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில்தான் பில்கேட்ஸ் சிறப்புத் தோற்றத்தில் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான ப்ரோமோவில் அமெரிக்காவில் உள்ள ஒருவரிடம் ஸ்மிருதி இரானி பேசுவது போல வீடியோ வெளியானது. அது பில்கேட்ஸ் தான் என்பதை ஸ்மிருதி இரானி உறுதிப்படுத்தியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்