பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக ராகுல்காந்தி நடத்திய பேரணியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகாரில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை என்று விமர்சித்துள்ளார்.
பீகாரில் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய ராகுல்காந்தி, அது தொடர்பாக இன்று பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக பேரணியை நடத்தினார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.
பின்னர் பேசிய அவர் “உங்கள் அனைவரையும் பார்ப்பதற்காக 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வந்திருக்கிறேன். பீகார் என்றாலே லாலு பிரசாத் யாதவ்தான் நினைவுக்கு வருவார். கலைஞரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். எத்தனையோ வழக்குகள் வந்த போதிலும் தைரியமாக எதிர்கொண்டு உயர்ந்த அரசியல்வாதியாக இருக்கிறார் லாலு பிரசாத் யாதவ்.
கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவே பீகாரை திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பீகாரில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை பறிக்க பார்க்கின்றனர். மக்களை வாக்களிக்க விடாமல் பாஜக தடுக்கிறது. 65 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை. ராகுல்காந்தி திருட்டு மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளார்” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K