அக்டோபரில் வெளியாகும் காத்து வாக்குல ரெண்டு காதல்!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (16:06 IST)
விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பை விரைவாக நடத்தி முடித்து அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் முடிவெடுத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்