ஷாருக்கானுடன் ஜோடி போடும் நயன்தாரா - தூள் கிளப்பும் அட்லீ!

சனி, 26 ஜூன் 2021 (15:51 IST)
ராஜா ராணி, தெறி, மெர்சல் , பிகில் என அட்லீ தொடர்ந்து இயக்கிய படங்கள் அனைத்தும் ஹாட்ரிக் வெற்றி அடித்தது. அதை தொடர்ந்து தான் இயக்கப்போகும் 5 வது படத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கானை ஹீரோவாக ஒப்பந்தம் செய்து விட்டார். 
 
இந்த படத்தின் ப்ரீ ப்ரோடுக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரவை நடிக்க வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அட்லீயின் முதல் படமும் இரண்டாவது படமும் நயன்தாரா நடித்திருந்தார். தற்போது நயன்தாரா நடிக்கும் இந்த படம் இந்தி ரசிகர்களை மட்டும்மல்லாது தென்னிந்திய ரசிகர்களையும் பெரிதும் எதிர்பார்க்க வைத்துள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்