“அதையெல்லாம் கடந்து வந்துவிட்டேன்..” ஆஸ்கர் பரிந்துரை குறித்து காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர்!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (16:00 IST)
அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் பட்டியலுக்கு இந்தியாவின் சார்பாக செலோ ஷோ என்ற குஜராத்தி திரைப்படம் தேர்வாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர்  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் ஆதரவாகப் பேசினர். மேலும் இந்த படம் இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பை விதைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஓடிடி பிரிமீயர் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் மே 13 ஆம் தேதி ஜி 5 ஓடிடியில் பிரிமீயர் ஆனது.

இந்த திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கர் பரிந்துரக்கு செல்லும் என்று தகவல்கள் வெளியாகின. ஆளும் கட்சியான பாஜகவும் இந்த படத்துக்கு ஆதரவான மனப்பாண்மையோடு இருந்ததால் சினிமா ரசிகர்களும் அதையே எதிர்பார்த்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக குஜராத்தி திரைப்படமான “செல்லோ ஷோ” என்ற படம் அனுப்பப்பட உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி “இப்போதைக்கு ஆஸ்கர் பரிந்துரை படத்தின் குழுவினருக்கு வாழ்த்து சொல்வதை தவிர வேறு ஒன்றுமில்லை. நான் அதிலிருந்து வெளியேறி இப்போது வேறு ஒரு படத்தை இயக்கி வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்