தமிழ்நாடு அரசு தனது கடமையை செய்து வருகிறது: ரெய்டு குறித்து ஓபிஎஸ்

சனி, 17 செப்டம்பர் 2022 (14:43 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை கடந்த சில மாதங்களாக சோதனை செய்வது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசு தனது கடமையை செய்கிறது என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் சி விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் தமிழ்நாடு அரசு தனது கடமையை செய்கிறது என்று தெரிவித்தார். மேலும் தாங்கள் குற்றமற்றவர்கள் என முன்னாள் அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்