நடிகர் சங்கத்தில் ஒரு பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல லட்சங்களை செலவு செய்ய நான் ஒன்றும் முட்டாளில்லை என்று நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்
நடிகர் சங்க தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் செல்லாது என சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து விஷால் அணியினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது
ஆனால் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்றும் தேர்தலை மீண்டும் நடத்துங்கள் என்றும் சங்கரதாஸ் அணியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த விஷால் அணியின் கருணாஸ் கூறியபோது, ‘நடிகர் சங்க தேர்தலை நடத்தும் அளவுக்கு நடிகர் சங்கத்தின் பணம் இல்லை என்றும், ஏற்கனவே சங்கத்தில் உள்ள பணம் அனைத்தும் கட்டிடத்தில் முடங்கி இருப்பதாகவும் புதிய தேர்தலை நடத்தும் அளவுக்கு பணம் இல்லை என்றும் கூறினார்
நடிகர் சங்க தேர்தலை பொறுத்தவரை சட்டரீதியான எங்களின் போராட்டம் தொடரும் என்றும் விரைவில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சங்கத்தில் பதவியை பெற வேண்டும் என்ற பதவி வெறி பிடித்தவர் நான் இல்லை என்றும் பதவிக்காக பல லட்சங்கள் செலவு செய்ய நான் ஒன்றும் முட்டாளில்லை என்றும் அவர் தெரிவித்தார்
மேலும் நடிகர் சங்க சொத்து என்பது தனிநபரின் சொத்து அல்ல என்றும் அதற்கு தனிப்பட்ட நபர்கள் யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்