கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் எப்போது ரிலீஸ்?… தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பதில்

vinoth
புதன், 16 அக்டோபர் 2024 (09:47 IST)
ஜப்பான் படத்தை முடித்த நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்குப் பின்னர் தொடங்கிய ‘மெய்யழகன்’ திரைப்படம் அதற்கு முன்பே முடிந்து ரிலீஸும் ஆகிவிட்டது. ஆனால் வா வாத்தியார் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் இப்போது படம் பற்றி பேசியுள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

அதில் “வா வாத்தியார் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. அதில் சிலக் காட்சிகளைப் பார்த்தேன். சிறப்பாக வந்துள்ளது. படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீஸாகும்” எனக் கூறியுள்ளார். நலன் குமாரசாமி இயக்கிய காதலும் கடந்து போகும் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்