கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

vinoth

வெள்ளி, 13 ஜூன் 2025 (16:20 IST)
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள ’படை தலைவன்’ திரைப்படம் பல தடங்கல்களுக்குப் பிறகு தற்போது ரிலீஸாகியுள்ளது.  இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த படத்தை இன்று முதல் நாளே பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் விஜயகாந்தின் ரசிகர்கள்தான். ஏனென்றால் இந்த படத்தில் விஜயகாந்தை ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக மீளுருவாக்கியுள்ளனர். ஏற்கனவே விஜய்யின் கோட் படத்திலும் இதுபோல் விஜயகாந்த் சம்மந்தப்பட காட்சிகள் இருந்தன.

இந்நிலையில் இன்று படம் பார்த்தவர்கள் விஜயகாந்த் சம்மந்தமானக் காட்சிகள் பெருமளவில் எதிர்பார்த்து வந்ததாகவும், ஆனால் அது மிக சீக்கிரம், திரைக்கதையில் தாக்கம் ஏற்படுத்தாமல் சென்றுவிட்டதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சண்முகபாண்டியனின் தோற்றம் விஜயகாந்த் போல இருந்தாலும், அவர் தந்தையை போல நடிப்பில் இன்னும் மெருகேறவில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்