ஜப்பானில் வரலாறு காணாத அரிசி தட்டுப்பாடு! என்ன காரணம்?

Prasanth Karthick

புதன், 28 ஆகஸ்ட் 2024 (15:20 IST)

தீவு நாடான ஜப்பான் அடிக்கடி நிலநடுக்கம், புயல்களை சந்தித்து வரும் நிலையில் அரிசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.

 

 

ஜப்பானில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் காரணமாக பயிர் விளைச்சலில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஜப்பானில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் ஜப்பான் அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தபோது எதிர்வரும் மாதங்களில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் அதற்கு தயாராக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டிருந்தது.

 

இதனால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்குள் புகுந்த மக்கள் கிடைத்த உணவு பொருட்களை எல்லாம் வாங்கி வீடுகளில் சேர்த்துள்ளனர். அவ்வாறாக மக்கள் மொத்தமாக உணவு பொருட்களை வாங்கி சென்றதில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. 

 

அடுத்த மாத இறுதியில் பயிர் அறுவடைகள் நடைபெற உள்ளதால் அதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் என ஜப்பான் அரசு எதிர்பார்க்கிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்