ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர்!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (16:25 IST)
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி அடுத்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை ராஜு முருகன் தற்போது முடித்துள்ளார்.

இந்நிலையில் படத்துக்கு ஒளிப்பதிவாளர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவி வர்மன் விரைவில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்