இன்னும் இருக்கிறதா கங்குவா ஷூட்டிங்?... இயக்குனர் சிவாவின் புது ஐடியா!

vinoth
திங்கள், 11 மார்ச் 2024 (07:26 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தில் தன்னுடையக் காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்தார் சூர்யா. இதையடுத்து வி எஃப் எக்ஸ் மற்றும் மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டம் இடம்பெறுவது போல சில காட்சிகளை இணைக்க இயக்குனர் சிவா திட்டமிட்டுள்ளாராம். அதனால் இப்போது மேலும் சில நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் சூர்யா மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்