இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புக்ஸ் கடையை திறந்துவைக்கும் கமல்ஹாசன்!

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (15:39 IST)
அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதால் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’, ரைட்டர் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன. நீலம் என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சென்னை, எழும்பூரில் நீலம் புக்ஸ் என்ற புத்தக விற்பனைக் கடையை அவர் தொடங்க உள்ளார். இதன் தொடக்க விழா நாளை நடக்க உள்ள நிலையில் இந்த கடையை திறந்து வைக்க உள்ளார் நடிகரும் , அரசியல்வாதியுமான கமல்ஹாசன்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்