கமல் & மணிரத்னம் காம்போவின் தக் லைஃப் பட ஷூட்டிங் நிறைவு!

vinoth
சனி, 21 செப்டம்பர் 2024 (14:47 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் பின்னர் சென்னையில் செட் அமைக்கப்பட்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன. கமல்ஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் தற்போது மொத்தக் காட்சிகளும் படமாக்கப்பட்டு ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து படக்குழுவினர் நிறைவு விழா பார்ட்டியில் ஈடுபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்