பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு கமர்ஷியல் வெற்றியைப் பெற்ற இயக்குனர் மணிரத்னம் அடுத்து இப்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்ககியுள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் இந்த ஆண்டு மத்தியில் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான தங்கள் ரிலீஸ்களை அறிவித்துள்ள நெட்பிளிக்ஸின் பட்டியலில் தக் லைஃப் படமும் இடம்பெற்றுள்ளது.