கெட்டவார்த்தையைத் தடுப்பதால் எல்லாம் மாறிவிடுமா?... சென்சார் போர்டுக்கு கமல்ஹாசன் கேள்வி!

vinoth
சனி, 6 ஜூலை 2024 (18:30 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் சென்சார் நடந்து முடிந்துள்ளது. அதன்படி படத்தின் ஓடுநேரம் 3 மணிநேரம் 4 நிமிடம் ஓடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது கமல்ஹாசன் “திரைப்படங்களில் கெட்ட வார்த்தையைத் தடுப்பதால் என் பிள்ளைகள் தெருவில் அந்த் வார்த்தைகளைக் கேட்காமல் தப்பித்து விடுவார்களா? எல்லா நாளும் அந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். எந்த வார்த்தை நல்ல வார்த்தை எது கெட்ட வார்த்தை என்பதை சூழல்தான் தீர்மானிக்கிறது. வன்முறைய வலிக்கின்ற மாதிரி காட்டினால்தான் அது நம் வாழ்க்கையில் நிகழாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்