புஷ்பா படத்தைப் பாராட்டிய கமல்ஹாசன்… மகிழ்ச்சியில் தேவி ஸ்ரீ பிரசாத்!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (16:24 IST)
புஷ்பா படத்தை பார்த்தி உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டியுள்ளதாக இசையமைபாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனாலும் வசூலில் சோடை போகவில்லை. இதுவரை 300 கோடிக்கும் மேலாக திரையரங்கு மூலமாகவே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தென்னிந்தியா மட்டும் இல்லாமல் வட இந்தியாவிலும் இந்த படம் வட இந்திய நடிகர்களின் படத்துக்கு இணையாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து புஷ்பா படத்தின் 2 ஆம் பாகம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் புஷ்பா படத்தை கமல்ஹாசன் ஓடிடியில் பார்த்து படக்குழுவினரின் பணியினை பாராட்டியதாக புஷ்பா படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசனோடு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்