சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ஆனாலும் அந்த படத்தின் வியாபார வேலைகளை தயாரிப்பாளர் தாணு தொடங்கிவிட்டார். இந்த படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் தளத்திடம் 50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் செய்தி வெளியானது. ஆனால் இப்போது அந்த தகவலை சோனி லிவ் நிறுவனம் மறுத்துள்ளது. தாங்கள் வாங்கும் படங்களை பார்த்த பின்னரே படத்தை வாங்குவது என்பதில் உறுதியாக உள்ளதாம். அதனால் இன்னும் தொடங்கப்படாத வாடிவாசல் படத்தை வாங்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.