உடல் நலப் பிரச்சனைகளால் ரஜினி ரூட்டில் செல்லும் கமல்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (16:49 IST)
நடிகர் கமல் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் படத்தில் நடிக்கிறார்.

உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தில் கமலோடு விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். 

வழக்கமாக கமல் தன்னுடைய படங்களின் ரிஸ்க்கான காட்சிகளில் கூட தானேதான் நடிப்பார். மேக்கப் உள்ளிட்ட விஷயங்களில் உடலை வருத்திக் கொண்டு நடித்து வந்தார். ஆனால் இப்போது அவரின் உடல் நலப் பிரச்சனைகளால் நீண்ட நேரம் அவரால் நடிக்க முடியாத சூழலில் அவரைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரை க்ளோஸ் அப் ஷாட் தவிர்த்த மற்றக் காட்சிகளுக்கு டூப்பை பயன்படுத்துகிறார்களாம். ஏற்கனவே ரஜினியும் இதுபோல தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்