ஒரு வழியாக முடிந்த கோப்ரா படப்பிடிப்பு… அறிவித்த இயக்குனர்!

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (10:55 IST)
இயக்குனர் அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

கோப்ரா படம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் பட்ஜெட் 50 கோடிகள் எனப் தயாரிப்பாளருக்கு சொல்லியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஆனால் இன்னும் படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் 68 கோடி ரூபாய் வரை செலவாகிவிட்டதாம். இன்னும் மீதமுள்ள காட்சிகளை படமாக்க 10 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் இயக்குனர் மேல் பயங்கர கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கோப்ரா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு மகான் படத்தில் கவனம் செலுத்தினார் தயாரிப்பாளர் லலித்.

மகான் முடிந்து ரிலீஸ் ஆகிவிட்ட நிலையில் இப்போது கோப்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்துவந்தது. ஏற்கனவே விக்ரம் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் மற்ற காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்து படக்குழுவோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்