5 மொழிகளில் கமல்ஹாசனின் விக்ரம் ரிலீஸ்: லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (18:55 IST)
கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
மேலும் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி மார்ச் 14-ஆம் தேதி வெளியிடப்போவதாக அறிவிக்க இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர் 
 
இந்த நிலையில் இந்த தகவலை மீண்டும் உறுதி செய்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது என்பதை குறிக்கும் வகையில் ஐந்து முறை போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகிறது
 
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜூன் தாஸ்,  உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்