3 லாரிகளில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய கமல்ஹாசன்

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (20:45 IST)
சமீபத்தில் சென்னை  உள்ளிட்ட 4 மாவட்டங்களை  அடுத்து, தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
 
இதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு  நிவாரண உதவி செய்து வருகிறது.
அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும், சினிமாத்துறையினரும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், சமீபத்தில், நடிகர் விஜய், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண  உதவிகள் வழங்கினார்.
 
இந்த நிலையில்,  தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வழியனுப்பி வைத்தார்.
 
3 லாரிகளில் 20 டன் அரிசி, பால் பவுடர், போர்வைகள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்