காதல் சுகுமார் இயக்கத்தில் நடிக்கிறாரா சந்தானம்…. நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட நடிகர்!

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (14:47 IST)
நடிகர் சந்தானம் இப்போது வரிசையாக பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த குலுகுலு திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அவர் நடிப்பில் ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் சந்தானம் ஆரம்ப கால படங்களில் இணைந்து நடித்த காதல் சுகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது சம்மந்தமாக காதல் சுகுமார் அவரின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இது சம்மந்தமாக தெரிவித்துள்ளார்.

காதல் சுகுமாரின் முகநூல் பதிவு:-

"பார்க்கணும்டா மச்சான்"
என்றதுமே "வா மச்சீ" சந்தானத்தின் உற்சாகக் குரல்.
பார்த்ததும் பழைய காதலியை சந்தித்ததைப் போல ஓர் உணர்வு..
ஷாட்டுக்கு ரெடியாக இருந்தவன் எனைப் பார்த்ததும் சந்தானம்... "வா மச்சான்
"நீ எப்டிடா அப்டியே இருக்க?"
"நீயும்தான்".
எண்ணம்தானே மச்சான்.எல்லாம்...!!
காதல் அழிவதில்லை, வல்லவன் என பழைய கதைகளை சொல்லி சிரித்து விட்டு.. "என்ன மச்சான் எதாவது...
"உதவிலாம் எதும் கேட்டு வரலடா. ஒரு சக கலைஞனா நண்பனா எனக்கொரு படம் பண்ணிக் குடுக்கணும்".

"லைன் இருக்கா?"
"ஸ்கிரிப்டே ரெடி .!
"ஒருநாள் சொல்றேன் ஃப்ரீயா இருக்கப்போ வா..!!"
என்றான்..(ஷாட் ரெடி)
"சரி கிளம்புறேன் மச்சி மகிழ்ச்சி" என்றதும் என்ன நினைத்தானோ
"சரி லைன் சொல்லு" என்றவன்... நின்ற நிலையிலேயே 10 நிமிடம் நான் சொன்னதை ரசித்து கட்டியணைத்துக் கொண்டு..
" சூப்பர்டா ..நீ ஜீனியஸ்.. எனக்கு அப்பவே தெரியும் .. விரைவில் அழைக்கிறேன்" என்றான்.
கொட்டாச்சி, கூல்சுரேஷ், எனபழைய நண்பர்களை நினைவு படுத்தி நாமெல்லாம் மறுபடி ஒரு படத்துல சேர்ந்து நடிக்கணும் மச்சி என்றான்.
நிச்சயம் செய்வான்.. வளரும்போதே தன் படங்களில் உடன் பயணித்த நண்பர்களை நடிக்க வைத்தவன்.!!!
#மகிழ்ச்சி_மச்சி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்