சந்தானம் நடித்துள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு
புதன், 26 அக்டோபர் 2022 (12:48 IST)
சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ஏஜென்ட் கண்ணாயிரம் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணியை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்
சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைபடத்தை மனோஜ் பிதா இயக்கியுள்ளார்.