விஷ்ணு விஷாலின் ‘காடன்’ ரிலீஸ் தேதியில் சிறு மாற்றம்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (19:24 IST)
விஷ்ணு விஷால், ரானா டகுபதி நடிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘காடன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து வரும் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்க்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது 
 
தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் மார்ச் 26ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இதில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது 
 
‘காடன்’ திரைப்படம் திட்டமிட்டபடி மார்ச் 26 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸாகும் என்றும் ஆனால் இந்தியில் மட்டும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
வட இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்த படத்தின் வட இந்திய ரிலீஸ் உரிமையை வாங்கிய நிறுவனம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வட இந்தியாவில் ‘காடன்’ படம் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்